2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மாநாகர சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் பற்றி ஆராய்வு

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலேசனைக் கூட்டத்தில் யாழ். நகர அபிவிருத்தி, நகரை ஏயை மாவட்டங்களில் இருந்து முதன்மை மாவட்டமாக கொண்டுவருவதற்கான செயற்திட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர ஆணையாளர் மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர். மேற்படி கூட்டத்தில் குறித்த பிரதேசக் குழு மற்றும் உறுப்பினர்களால் சமர்பிக்கப்பட்ட பிரேரணைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X