2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குழு மோதலில் ஈடுபட்ட 4 மாணவர்கள் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

Super User   / 2012 ஜூன் 06 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம் மடம் வீதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற மோதலில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் உட்பட ஏழு பேரையும்  எதிர்வரும் ஜுன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டுள்ளார்

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 13 வாள்கள் 3 மோட்டர் சைக்கிள் மற்றும் ஒரு கூரிய இருப்பு கம்பி ஆகியவற்றை யாழ். பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் சன்று பொருட்களாக காட்சிப்படுத்தினர்

இவற்றை பாதுகாப்பாக களஞ்சிய பகுதியில் வைக்குமாறும் எதிர்வரும் 19ஆம் திகதி குழு மோதலில் படுகாயமடைந்தவர்களையும் மன்றில் ஆஜராக்குமாறும் யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச யாழ். பொலிஸாருக்கு இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X