2025 மே 17, சனிக்கிழமை

யாழ்.மாநகர சபையின் 2ஆவது கூட்டத் தொடர் ஒத்திவைப்பு

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர சபையின் 2012ஆம் ஆண்டுக்கான 2ஆவது கூட்டத்தொடர் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதவல்வர் திருமதி யேகேஸ்வரி பற்குணராஜா இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெறவிருந்த யாழ். மாநகர சபையின் 2ஆவது கூட்டத் தொடர் தவிக்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இக் கூட்டத் தொடர் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ். மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த கூட்டத்தொடரை மாநாகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பகிஸ்கரிப்பதற்கு முடிவு செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .