2025 மே 19, திங்கட்கிழமை

வேலையற்ற 2,000 பட்டதாரிகளுக்கு நாளை யாழில் நியமனம் வழங்கல்

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ் மாவட்டத்திலுள்ள வேலையற்ற 2,000 பட்டதாரிகளுக்கான நியமனம் நாளை திங்கட்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது என யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த யூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சைக்கு தோற்றியோரில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றவர்களுக்கே இதன்போது நியமனம் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வி கற்று சான்றிதழ் பெற்றவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரினால் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு முதற் கட்டமாக ஆரம்பித்து வைக்கப்ட்டவுள்ளது.

பின்னர் கட்டம் கட்டமாக ஏனையோருக்கான நியமனங்கள் வழங்கப்படும் என யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X