2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வலி. வடக்கில் 970 குடும்பங்கள் மீளக்குடியேற்றம்

Super User   / 2010 நவம்பர் 27 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பகுதியில் 970 குடும்பங்கள் நேற்று சனிக்கிழமை மீளக்குடியமர்தப்பட்டுள்ளன.

பலாலி விமான தளத்துக்கு அண்மையாக இருந்ததால் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், மேற்படி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குவதற்கு இராணுவம் தீர்மானித்ததையடுத்து அங்குள்ள வீடுகளின் உரிமையாளர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது தொடர்பான வைபவத்தில் பங்குபற்றினர். (என். பரமேஸ்வரன்) DM


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X