2025 மே 17, சனிக்கிழமை

யாழில் 13 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 15 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பாவனை அதிகார சபையினால் யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 13 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு காலவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விற்பனை விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் மொத்தமாக 59,500 அபராதம் விதிக்க தீர்ப்பளித்தார் யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .