2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். வாகன விபத்தில் பெண் பலி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 25 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம், தாஸ்)

யாழ். காங்கேசந்துறை பன்றிக்குட்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 32 வயதான சோபா நோபல் என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். இந்த வாகன விபத்து இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான லொறி மோதியுள்ளது.

குறித்த பெண்ணின் தலைமேல் லொறி ஏறியதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0

  • suren Thursday, 25 November 2010 06:24 PM

    இறந்தது சிறுமி அல்ல அது ஒரு பெண் வயது ௩௨ செய்தி தவறானது. இப்படிப் பிரசுரிக்காதீர்கள். தயவு செய்து மாற்றுங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X