2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.கிளாலியில் 165 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். கிளாலி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் இன்று திங்கட்கிழமை காலை மீள்குடியேற்றம் செய்யப்பட்டள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதியில் மீள்குடியேற்றப்படவிருந்த 230 குடும்பங்களில் 162 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் ஜெயராணி, பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் முகுந்தன், பச்சிலைப்பள்ளி பிரதேசசபைத் தலைவர் சிவப்பிரகாசம், கிளிநொச்சி வலய  கல்விப் பணிப்பாளர் முருகவேல், 552வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அத்துல சில்வா, கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் அதிகாரி ரணசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X