2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் கொகா கோலா பாத்வேயின் 2ஆவது கிரிக்கெட் பயிற்சி முகாமை ஆரம்பித்த அரவிந்த

Menaka Mookandi   / 2012 ஜூன் 22 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

கொக்கோ கோலா பாத்வேயின் இரண்டாவது கிரிக்கட் பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை அரவிந்த டி சில்வாவினால் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த பயிற்சி முகாம் மூன்று நாள் நடைபெறவுள்ளதுடன் 72 மாணவர்கள் பயிற்சியைப் பெறவுள்ளனர். இந்த பயிற்சியானது நாடுமுழுவதும் அடித்தள மட்டத்திலிருக்கும் இளைஞர்களின் திறமைகளை இனம் கண்டு அவர்களை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டது.

இந்த கிரிக்கட் பயிற்சி முகாம் ஆரம்ப நிகழ்வில் 51 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பயஸ் விக்கிரமசிங்க, கொக்கோ கோலா பாத்வேயின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சாந்த பெர்ணான்டோ, கொக்கோ கோலா பாத்வேயின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நீலக்க திலகரெட்ண, யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X