2025 மே 17, சனிக்கிழமை

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை வருகிறார்

Kogilavani   / 2011 டிசெம்பர் 31 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளார்.

தேசிய மும்மொழி கொள்கை அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம்  திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் விசேட உரையாற்றவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் மூன்று நாட்கள் தங்கவுள்ள இவர், யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களையும் சந்திக்கவுள்ளதுடன் யாழில் நடைபெறவுள்ள இந்திய கலை கலாசார நிகழ்வுகளிலும்  கலந்துக்கொள்ளவுதாக யாழ்.இந்தியத் துனைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • முல்லா Sunday, 01 January 2012 07:24 PM

    ஐயா நீங்க வந்து இனவாதம் இல்லாத ஒரு சமுதாயம் மலர அறிவுரை சொல்லுவீர்கள் என்றும் அதை அனைவரும் கேட்டு நடப்பர் எனவும் நம்புகிறேன்.

    Reply : 0       0

    suthan Monday, 02 January 2012 03:11 PM

    ஐயா நீங்க வந்தாலே எமக்கு அது ஒரு பெரும் பாக்கியம் ...வருக வருக பெருந்தகையே ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .