Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சங்கவி, தாஸ்)
வடமாகாணத்தில் இதுவரை செய்கை பண்ணப்படாத ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் பயிர்ச்செய்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஏர் பூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஆளுநர் மேலும் கூறுகையில்:
"அரியாலைப் பிரதேசத்தில் பயிர்ச் செய்கைக்காக இன்று 450 ஏக்கர் வயல்நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
"வடக்கின் வசந்தம்" திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் அரசு முன்னெடுத்துவரும் மீள்புனரமைப்பு நடவடிக்கைகளில் விவசாயத்துறையை மேம்படுத்துவது முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது.
யாழ். குடாநாட்டில் உள்ள விவசாய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இங்கு பொருளாதார மாற்றம் ஒன்றை ஏற்படுத்தமுடியும். இதற்காகவே விவசாயத்துறையில் அரசு பல நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
வடமாகாண விவசாய நடவடிக்கைகளுக்காக 700 உழவு இயந்திரங்களை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் நீர்ப்பம்பிகளையும் விவசாய உள்ளீடுகளையும் வழங்கிவருகின்றோம்.
பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மெருகூட்டவேண்டும்" என்றார்.
இந்நிகழ்வில் 17 இரண்டு சில்லு உழவு இயந்திரங்களும், 30 நீர்ப்பம்பிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.பத்மநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

.jpg)



40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago