2025 மே 17, சனிக்கிழமை

யாழில் 200 பேருக்கு கண்புரை நோய்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 15 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                        (ஆர்.சுகந்தினி)

கண்ணழுத்த வாரத்தை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் பரிசோதனையின்போது 200 பேர் கட்ராக் நோயினால் (கண்புரை) பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரகுமார் தெரிவித்தார்.

இதில் 50 பேர் உடனடியாக கட்ராக் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடாளவிய ரீதியில் கண்ணழுத்த வாரம் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையிலும் கண்ணழுத்தப் பரிசோதனை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு நோயுடையவர்கள், பரம்பரை கண் பார்வைக் குறைபாடுடையவர்கள் உள்ளிட்டோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் டாக்டர் சந்திரகுமார்; குறிப்பிட்டார்.  
 
'குளுக்கோமா நோய்க்கான அறிகுறி தென்படுவதில்லையெனவும் எங்களுக்கு தெரியாமலேயே கண் பார்வை படிப்படியாக குறைவடைந்து செல்லும். கண் அழுத்தம் கூடி கண் நரம்பில் இது பாதிப்பை ஏற்படுத்தும்' எனவும் அவர்  தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .