2025 மே 19, திங்கட்கிழமை

விவசாய கண்காட்சி – 2011 ஆரம்பம்

Super User   / 2011 செப்டெம்பர் 05 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

வட மாகாண விவசாய அமைச்சும் விவசாய திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விவசாய கண்காட்சி - 2011 இன்று யாழ். திருநெல்வேலி விவசாய பயிற்சி நிலைய வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சியாண்மை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.எ.சந்திரசிறி அகியோர் இந்த கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

ஏதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியில் சுமார் 70க்கு மேற்பட்ட அரச, தனியார் விவசாய காட்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இன்றைய கண்காட்சியை கண்டு கழித்தாக வட மாகாண விவசாய கால்நடை காணி நீர்ப்பாசன மீன் பிடி அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்தீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X