Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 22 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்தியத் துனைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்தார்.
இந்திய வங்கி யாழ். கிளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டார்.
இங்கு தொடரந்தும் உரையாற்றிய அவர்,
யாழ். மக்களைப் பார்ப்பதற்கு மிக விருப்பம் கொண்டுள்ளார் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
எதிர்வரும் 23 ஆம் தினதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் விசேட உரையாற்றவுள்ளார்.
அதனை தொடர்நது பிற்பகல் 1 மணியளவில் யாழ். இந்துக்கல்லூரியில் யாழ்.மாணவர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மாலை 3 மணியளவில் யாழ்.இந்தியத் தூதுவராலயத்தில் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்
மலையில் யாழ்.ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகளைச் சந்தித்து கலந்துரையாடி விட்டு இரவு 7 மணியளவில் கொழும்பு திரும்பவுள்ளதாக இந்தியத் துனைத் தூதுவர் எஸ்.மாகாலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
8 hours ago
16 May 2025