2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் 2,966 படகுகளுக்கு எரிபொருள் மானியம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 31 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் 2966 படகுகளுக்கு எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்டக் கடற்றொழில் பரிசோதகர் பிரிவுகளான ஆழியவளை, தாளையடி, பருத்தித்துறை கிழக்கு, பருத்தித்துறை மேற்கு, காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை கிழக்கு, சண்டிலிப்பாய், சுழிபுரம், ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு, யாழ்ப்பாணம் மேற்கு, யாழ்ப்பாணம் கிழக்கு, சாவகச்சேரி ஆகிய பிரிவுகளில் உள்ள படகுகளுக்கு மானிய எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதில் பலநாள் கலம் 29, ஒருநாள் கலம் 25, பிளாஸ்ரிக் படகுகளுக்கு 2580, மரத்தில் இயந்திரம் பூட்டப்பட்ட கலங்களுக்கு 332 எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .