Suganthini Ratnam / 2010 நவம்பர் 19 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாணத்தில் மூன்று வர்த்தக வலயங்களை துரிதகதியில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தக வலயங்கள் மன்னார், கிளநொச்சி; மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் சில மாதங்களில் இந்த வலயங்கள் செயல்பட ஆரம்பிக்குமெனவும் அவர் கூறினார்.
மன்னாரில் அமையவுள்ள வலயத்திற்கான காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய வலங்களுக்கான காணிகளும் தற்போது தெரிவுசெய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சிறிய மற்றும் நடுத்தர தரத்தை கொண்;ட தொழில் நடவடிக்கைகள் இந்த வலயத்தில் செயற்படுவதுடன் அதற்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு வர்த்தக வலயங்கள் அமைக்கப்படுவதன் மூலம் வடமாகாண உற்பத்தி பொருட்களை உள்ளூரிலும் வெளிநாடுளிலும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவு ஏற்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago