2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 4 மணித்தியாலத்தில் தபால்களை ஒப்படைக்கும் 'கூரியர் சேவை' ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ்.பிராந்திய தபாலகத்தில் 4 மணித்தியாலத்துக்குள் தபால்களை ஒப்படைக்கும் கூரியர் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ளூர் பிரதேசங்களில் கடிதங்கள், ஆவணங்கள், பொதிகளை 4 மணித்தியாலயத்திற்குள் ஒப்படைக்கும் விசேட கூரியர் சேவையினை வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என்.ரெட்ணசிங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

துவிச்சக்கர வண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் மற்றும் வாகனங்களிலும் தபால்களை ஒப்படைக்கும் இந்த விசேட சேவை யாழ்ப்பாண தபாலக வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • Jaleel jp Monday, 04 June 2012 06:12 AM

    இந்த சேவைக்கு நன்றி. இருப்பினும் உஙகள் சேவையாளர் ஒருவர் அவரின் பின் புறும் பட்டியில் உள்ள இங்கிலிஸ் எழுத்தை தலைகீழாக கட்டிவிட்டார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X