2025 மே 17, சனிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய 5 மருந்தகங்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 15 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட மருந்தகங்களில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய 5 மருந்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை அறிவித்துள்ளது.

இந்த 5 மருந்தகங்களிலும்  பாவனைக்கு உதவாத உடல் நலத்திற்கு கேடான மருந்துகளும்  காலாவதியான மருந்துகளும் இருந்தமை தொடர்பிலும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் போலி மருந்தகங்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுமதிப்பத்திரம் இன்றி  இயங்கும் மருந்தகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .