2025 மே 17, சனிக்கிழமை

பனடோல் கார்ட் ஒன்றை ஒரு ரூபா அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 5000 ரூபா அபராதம்

Kogilavani   / 2012 ஜனவரி 12 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் பனடோல் கார்ட் ஒன்றை ஒரு ரூபா அதிக  விலைக்கு விற்பனை செய்தவருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் 5000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

ஒரு பனடோல் கார்ட்டின் விற்பனை விலை 27 ரூபா ஆகும். எனினும் அவர் 28 ரூபாவுக்கு விற்பனை செய்ததினால் பாவனை அதிகார சபையினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. குறித்த கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவருக்கு யாழ் நீதவான் எம். கணேசராசா 5000 ரூபா அபராதம் விதித்தார்.

 


You May Also Like

  Comments - 0

  • lovenation Friday, 13 January 2012 05:34 AM

    அரசியல்வாதிகளுக்கு யார் அபராதம் விதிப்பது ,மக்களுக்கு சேர வேண்டிய முளுப்பூசநிக்காயையும் விழுங்கி ஜாலியாக திரியும்போது.?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .