Suganthini Ratnam / 2010 நவம்பர் 28 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
இளைஞர் நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் யாழ். மாவட்டத்தில் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் எற்பாட்டில், இளையோர் நாடாளுமன்றத்திற்காக யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் ஜந்து பிரதேச செயலகங்களிலும் ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும் போட்டியின்றி பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் இருவர் வேட்பாளர்களுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோதிலும், அதில் ஒருவர் கடைசி நேரத்தில் தமது வேட்புமனுவை மீளப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு கனியூட் மேரியன் மக்கிலின் தெரிவுசெய்யப்பட்டார்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு ரவிச்சந்திரன் குகராஜ் ஏகமனதாக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.
வேலனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு அம்பிகைபாகன் ஸ்ரீராகவன் ஏகமனதாக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு கேசவநாதன் கோகுலானந்தா போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு இராஜசிங்கம் ரவிந்திரன் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
ஏனைய பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு தேர்தல் நடைபெற்றபோதிலும், முழுமையாக முடிவுகள் வெளியிடப்படாத நிலைமை காணப்படுகின்றது.
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் தேர்தல் சூடுபிடித்த நிலையில், அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago