2025 மே 17, சனிக்கிழமை

சுதந்திரதினத்தையொட்டி யாழில் 8 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கையின் 64ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் 8 கைதிகள் இன்று சனிக்கிழமை நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறுகுற்றங்கள் செய்து தண்டப்பணம் செலுத்தத் தவறியவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகளும்  பலாலி விவசாயப் பண்ணையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 4 பேரும்
யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்ராட மற்றும் யாழ். சிறைச்சாலை பிரதம ஜெயிலர் இந்திரகுமார் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.;

இக்கைதிகளில் 5 பேர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைவடைந்துள்ளதாகவும் சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களே அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கைதிகளின் விடுதலையின் பின்னர்  ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் யாழ். சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்

யாழ். சிறைச்சாலையில் மொத்தமாக 229 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 16 பெண்கள் அடங்குவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .