2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சத்தியசாயிபாபாவின் 85 வது ஜனன தின விழா

Kogilavani   / 2010 நவம்பர் 23 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)
ஸ்ரீ சத்தியசாயிபாபாவின் 85வது ஜனன தின விழா இன்று  , திருநெல்வேலி சேர் பொன் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயிபாபா சேவா நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இதில் முதற்கட்டமாக இன்று அதிகாலை முதல் 10 மணி வரை ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், வேதபாராயணம், காயத்திரி ஜெபம், நாம பஜனை, சத்தியன் இசைக்குழுவின் இசைத் தியானம், என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து 11 மணிமுதல் நாடகம், மாவட்ட நீதிபதி ஸ்ரீ.ஆர். வசந்த சேனனின் சிறப்புச் சொற்பொழிவு, பஜனை, மங்கள ஆராத்தி மதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி கோபிதாசனின் வயலின் இசை, வில்லுப்பாட்டு, தலைவர் உரை, பஜனை, திரு ஊஞ்சல் நடைபெறவுள்ளதுடன்,  5.15 மணிக்கு மகா மங்கள ஆராத்தியுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெறவுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X