2025 மே 17, சனிக்கிழமை

யாழில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 86 திருட்டுச் சம்பவங்கள்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.குடாநாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 86 திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்கள் காரணமாக மக்கள் தினமும் அச்சத்துடன்  வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளிலேயே அதிகமான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆயுத முனையில் அச்சுறுத்தி திருட்டு இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .