Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 07 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பணம், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்ட அமரர் தங்கம்மா அப்பாக்குட்டியின் 87 வது பிறந்த நாள் அறக்கொடை நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை துர்க்கையம்மன ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, உறவினர்களால்; தங்கம்மா அப்பாக்குட்டியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
ஆலய நிர்வாக சபைத் தலைவர் ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட உடற்கூற்றியல் துறைத் தலைவர் கலாநிதி செல்வி சகுந்தலா அம்பிகைபாகன், வட பிராந்திய சுகாதார சேவைகள் யாழ். மாவட்டப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், முல்லைத்தீவு துணுக்காய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, அறக்கொடையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் என்பு முறிவுப் பிரிவுக்கு ஒரு லட்சம் ரூபா உதவித்தொகையும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு ஐம்பாதயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.
இதேவேளை, துணுக்காய் கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில்; கல்வி கற்;கும் வறுமைக்கோட்டிற்க்கு உட்பட்ட 100 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியாக இரண்டு லட்சம் ரூபா துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.
ஓய்வுப்பெற்ற அதிபர் சிற்பி. சிவசரவணபவன், ஓய்வுப்பெற்ற சுகாதாரப் பரிசோதகர் பொன்னையா செல்லப்பா, புகைப்படக் கலைஞர் எஸ்.கதிரவேலு, சைவசமய பௌராணிகர்பண்டிதை திருமதி. சிவபாக்கியம் பாலநாதன், மற்றும் சிற்பக் கலைஞர் எ.வி.ஆனந்தனும் ஆகியோர் இதன்போது விருதுகளை பெற்றுக் கொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago