2025 மே 19, திங்கட்கிழமை

ரயில்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கோருகிறது IRCON

Super User   / 2011 செப்டெம்பர் 04 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

வடக்கில் ரயில்பாதை நிர்மாணப் பணியில் சம்பந்தப்பட்டுள்ள IRCON எனும் இந்திய நிறுவனம், பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கப்படவுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நில ஆக்கிரமிப்புகளை தாமதமின்றி அகற்றித் தருமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இப்பகுதியிலுள்ள ரயில்பாதையில் பெருமளவு காணிகளை மக்கள் ஆக்கிரமித்திருப்பதாகவும் ரயில்பாதை புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் IRCON பொதுமுகாமையாளர் எஸ்.எல். தாஸ்குப்தா டெய்லி மிரருக்கு கூறினார்.

இப்பகுதியில் ரயில் பாதை புனரமைப்பு பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை . நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்திற்கும் மேற்படி நிறுவனத்திற்கும் இடையில் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது. 

இதேவேளை மதவாச்சி- தலைமன்னார் மற்றும் ஓமந்தை - பலாலி பகுதிகளுக்கு இடையிலான ரயில்பாதை நிர்மாணப் பணிகளை இந்நிறுவனம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X