Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 09 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
“போராட்டங்களுக்குரிய பிரச்சினைகளை உணர்ந்து அவற்றுக்கானத் தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக, அப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வதென்பது இந்த நாட்டுக்கு ஆரோக்கியமான முன்னடத்தையாகாது" என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் எமது மக்களது உணர்வு ரீதியிலான பிரச்சினைகள், அடிப்படை மற்றும் அத்தியாவசிய பிரச்சினைகள் என பலதரப்பட்ட பிரச்சினைகள் விசேட நெறிமுறைகளுக்கு ஊடாக தீர்க்கப்பட வேண்டியன.
“இவ்வாறான பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்கின்ற பிரச்சினைகளாக இருக்கின்ற நிலையில், நாட்டில் மேலும் பல பிரச்சினைகள் எமது மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாகவேத் திணிக்கப்படுகின்ற நிலைமைகளும் இல்லாமலில்லை.
“எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிதல், தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல் போன்ற பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் கட்டாயமாகத் தீர்க்கப்பட வேண்டியவை.
“குப்பைகள் தொடர்பில் ஒழுங்கு முறையான கொள்கைகள் இல்லாமையும், அதிலே இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் இருந்து வந்துள்ள இழுத்தடிப்புகள் காரணமாகவும் மீதொட்டமுல்ல பகுதியில் ஓர் அனர்த்தம் நிகழ்ந்து முடிந்துள்ளது.
“மேலும், கண்டி, கொஹாகொடை, தேக்கவத்த மற்றும் பண்டாரவளை, கலமடுகஸ்தன்ன போன்ற பகுதிகளிலுள்ள குப்பை மேடுகள் தற்போது அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிய வரும் நிலையில் அது குறித்த அவதானங்கள் செலுத்தப்படுவதாக இல்லை.
“நாட்டில் இவ்வாறானதொரு நிலை நிகழுகின்றபோது போராட்டங்கள் எழுவது இயல்பாகும். இந்த நிலையில், அப் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படாமல், அப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால், அது இந்த நாட்டின் எதிர்காலத்துக்கு பெரிதும் பாதகமாகவே அமையும்” என, டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago