Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கடத்தப்பட்ட எனது அண்ணாவை கைகளைக் கட்டியவாறு 3 முறை எமது வீட்டுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் வீட்டை சோதனையிட்டனர் என காணாமற்போன ரி.ரசிதீபனின் சகோதரர் யசோதரன் சாட்சியமளித்தார்.
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
எனது அண்ணா, 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி எங்கள் வீட்டிலிருந்து அம்மம்மா வீட்டுக்குச் செல்லும் போது, மானிப்பாயில் வைத்து கடத்தப்பட்டார்.
மறுநாள் அண்ணாவை கைகள் கட்டிய நிலையில், கூழாவடி இராணுவ முகாம் இராணுவத்தினர் எங்கள் வீட்டுக்கு கூட்டிவந்து, எங்களை பக்கத்துக்கு வீட்டுக்கு அனுப்பிவிட்டு வீட்டைச் சோதனையிட்டனர். 1 மாதத்துக்குள் இவ்வாறு 3 முறை சோதனையிட்டனர். இதன்போது, அண்ணாவையும் கூட்டிவந்தனர்.
இதன் பின்னர், நாங்கள் கூழாவடி முகாமுக்குச் சென்று கேட்டபோது, விசாரணைகளின் பின் விடுவிப்பதாகக் கூறினர். தொடர்ந்து சில நாட்கள் கழித்து சென்று கேட்டபோது, மேலதிக விசாரணைக்காக பலாலி இராணுவ முகாமுக்கு அனுப்பியதாகக் கூறினர். அதன் பின்னர் அண்ணா பற்றி எவ்வித தகவல்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .