Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டிய கடற்றொழிலை தடுக்க இயலாத நிலையே தொடர்ந்து காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறியதும், தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணப் பயன்பாட்டைக் கொண்டதுமான கடற்றொழிலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவர்களை கைது செய்தல் மற்றும் அவர்களது படகுகளைப் பிடித்து தடுத்து வைத்தல் தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கருத்து தெரிவித்திருந்தார்.
அதேநேரம், தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்படி கடற்றொழிலாளர்களின் பிரச்சினையால், இப்பகுதியில் கடற்படையினரின் எண்ணிக்கை பேணப்பட வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டிய கடற்றொழிலை தடுக்க இயலாத நிலையே தொடர்ந்து காணப்படுகிறது.
நெடுந்தீவு, காரைநகர், நயினாதீவு, அனலைதீவு போன்ற தீவகப் பகுதிகளை அண்டிய கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட உபகரணப் பயன்பாட்டினைக் கொண்டதுமான கடற்றொழில்கள் தற்போது அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியக் கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தும் இழுவலைப் படகுகளால் எமது கடல் வளம் அடியோடு சுரண்டப்படுவதுடன் எமது கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டும் வருகின்றன. இதனால், எமது கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட இயலாத நிலையே காணப்படுவதால் இம்மக்களது வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, இந் நிலையை உடனடியாக மாற்றி, எமது கடற்றொழிலாளர்கள் நிம்மதியுடன் தங்களது தொழிலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கமைவாக, சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
தற்போது குடிவரவு, குடியகழ்வு சட்டத்தின் கீழ், எல்லை மீறும் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். அந்த நிலைப்பாட்டை மாற்றி, 1979ஆம் வருட 59ஆம் இலக்க வெளிநாட்டு மீன்பிடி கலங்கள் ஒழுங்கு விதிகளின் கீழ் இக்கைதுகள் இடம்பெறுமானால், இவர்களது எல்லை மீறல்களைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago