Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தெற்கில், சாலவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்பவம் இடம்பெற்று இரு தினங்களிலிருந்தே தொடர்ந்தும் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கிளிநொச்சி சந்தையில் ஏற்பட்ட தீயானதுஇ செயற்கையாகவே ஏற்பட்டதெனக் கூறி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, நிதியுதவி வழங்க மறுத்துவிட்டது. இது எவ்வகையில் நியாயமென, வடமாகாண சபையில், நேற்று வியாழக்கிழமை (22), கேள்வி எழுப்பப்பட்டது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்று இடம்பெற்றபோது, கடந்த 16ஆம் திகதியன்று தீயினால் அழிவடைந்த கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான நிவாரணம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
“தீ விபத்து ஏற்பட்டு மறுநாள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். அவருக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்திக் கூறினேன். ஆனால்இ இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுக்கவில்லை” என்றார்.
அத்துடன், “இயற்கை அழிவுகளுக்கு மாத்திரம் நிதியுதவி வழங்கும் என்றும் இது செயற்கையான ரீதியில் ஏற்பட்ட இழப்பு என்பதால், நட்டஈடு வழங்க முடியாது போகும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது” அஎன்றும் முதலமைச்சர் கூறினார்.
இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா,
“'பாதிக்கப்பட்ட வர்த்தகர்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அவர்களுக்கான முதலீடுகள் தேவை. இவை அனைத்துக்கும் முன்னதாக அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிசமைக்க வேண்டும். இச்சம்பவத்தை, செயற்கை அழிவு என்று கூறமுடியாது. சோலைக்காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவி அனைத்துக் கடைகளும் எரிந்தன.
மின்னொழுக்கினால் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்ட சாலவ பிரதேசத்துக்கு கடந்த புதன்கிழமையும் (21) வரையும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, இங்கு மாத்திரம் ஏன் நிதியுதவி வழங்க முடியாது? தெற்குக்கு ஒரு சட்டம், வடக்குக்கு ஒரு சட்டமா?” என்றார்.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago