2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'அரச காணிகளுக்கான சட்டப்பூர்வ உரித்துரிமை வழங்கும் ஏற்பாடு வரவேற்கத்தக்கது'

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச காணிகளில் பத்து வருடங்களுக்கு மேலாக குடியிருக்கும் குடும்பங்களுக்கு, அந்தக் காணிகளை சட்டப்பூர்வ உரித்துரிமையாக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அரச காணிகளில் பல வருடங்களாக எவ்வித ஆவணங்களும் இன்றி வாழ்ந்து வருகின்றன.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலங்களில் இவ்வாறான பல குடும்பங்களுக்கான உரிமைப் பத்திரங்களை நாம் வழங்கியிருந்தோம். எனினும், மேலும் பல குடும்பங்களுக்கு வழங்க வேண்டியிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய ஆட்சி ஏற்பட்டதன் பின்னர், இத் தேவை தொடர்பில் நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளோம்.

இதனை உணர்ந்த அரசாங்கம் தற்போது அக் காணிகளை சட்டபூர்வமாக அம்மக்களுக்கு உரித்துடைமையாக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X