2025 ஜூலை 19, சனிக்கிழமை

அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்வதை தடை செய்ய வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பாரவூர்திகளில் அளவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றிச் செல்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் இருந்து கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பாரவூர்திகளும்,கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் பாரவூர்திகளும்  2,500 கிலோ முதல் 3,500 கிலோ வரையான பொருட்களை ஏற்றி செல்லப்படுகின்றது.

இதனால், பாரவூர்திகள் விபத்துகளில் அகப்படுவதுடன் உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன. இந்த வகையில் கடந்தாண்டு 5 பாரிய விபத்துக்கள் இடம்பெற்று பாரவூர்தி சாரதிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய நிலமை மேலும் தொடராதவாறு அதிகமாக பொருட்கள் ஏற்றுவதை தடை செய்வதன் மூலம் ஏனைய பாரவூர்திகளும் தொழில் வாய்ப்பை பெற முடியும் எனவும் இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X