2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

2006ஆம் ஆண்டிலிருந்தான சம்பள நிலுவை வழங்கப்படவுள்ளது

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட 12 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா பணியாளர்கள் ஆகியோருக்கான, 2006 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படாமல் உள்ள சம்பள நிலுவை, வருடாந்த சம்பள ஏற்ற படிகளை வழங்குவதற்காக 7.82 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் உள்ள 09 மாகாணங்களிலும் கடந்த  2006ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா பணியாளர்கள் ஆகியோருக்கு  வழங்கப்படாமல் உள்ள சம்பள நிலுவை, வருடாந்த சம்பள ஏற்ற படிகளை வழங்குவதற்காக 902.94 மில்லியன் ரூபாய் நிதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் 7.82 மில்லியன் ரூபாய் நிதி வடமாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X