2025 ஜூலை 23, புதன்கிழமை

60 ஆயிரம் மீன் குஞ்சுகள்

Gavitha   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தை இலங்கைக்கான கனேடிய தூதுவர் சீலி வைற்றிங் (Shelley whiting) செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பித்து வைத்தார்.

இச் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக 60 ஆயிரம் மீன்குஞ்சுகள் மணியங்குளத்தில் விடப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் செயற்றிட்டம், கனேடிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வில், 18 மீனவக் குடும்பங்கள் கலந்துகொண்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .