2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘ஆவா என்பது மாயை’

George   / 2016 நவம்பர் 08 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“ஆவா குழுவொன்று ஒன்றுமே இல்லை. அப்படியொரு மாயையை ஏற்படுத்தி, அரசியல் ரீதியான பழிவாங்கல், கைதுகளை மேற்கொள்ள இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றன” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்றுத் தெரிவித்தார்.

“முன்னர், ஆவா குழு என்று கூறப்பட்டு, கைது செய்யப்பட்ட 15 பேர் தொடர்ந்தும் சிறைச்சாலையில் உள்ளனர். இந்நிலையில், மீண்டும், ஆவா என்று பெயர் உச்சரிக்கப்படுகின்றது. இவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படியென்றால், ஆவா குழு பயங்கரவாத அமைப்பா?

எமது கட்சியின் உறுப்பினர் அலெக்ஸ் அரவிந்தன், ஆவாக் குழு உறுப்பினர் என்று கடந்த சனிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார். 48 மணி நேரங்கள் கடந்துள்ள போதிலும், கைது செய்யப்பட்டதுக்கான காரணம் கூறப்படவில்லை. அவர் ஒரு சட்டத்துறை மாணவன். அவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றால்?, எவ்வாறு நீதிமன்றத்துக்கு வந்து சென்று இருக்க முடியும்?” எனறார.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X