2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

13ஆவது சந்தேகநபரும் சிக்குவார்

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் 13ஆவது சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில், இன்று திங்கட்கிழமை (11) தெரிவித்தனர்.

குறித்த வழக்கு, நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 'கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களுக்கு மேலதிகமாக 13ஆவது சந்தேகநபரையும் எதிர்வரும் நாட்களில் கைது செய்யவுள்ளோம்' என குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.

12 சந்தேகநபர்களில் இறுதியாக கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு நாளை செவ்வாய்க்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X