2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'இனவாத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் உரிய முறையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாதுள்ள நிலையில், அதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ள தற்போதைய அரசாங்கம், தேசிய நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தற்போது மீண்டும் தலைதூக்கி வருகின்ற இனவாத செயற்பாடுகளை முற்றாக நிறுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டில் சுயலாப அரசியல் காரணங்களுக்காக சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இனவாதத்தைத் தூண்டும்  வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது மக்கள் நிம்மதியானதொரு வாழ்வை நோக்கி அடியெடுத்துவைத்து வரும் நிலையில், எமது மக்களின் நிம்மதியானதும், சுதந்திரமானதுமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் முகமாக தேசிய நல்லிணக்கம் வலுவுள்ளதாகக் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும்.

இதனை நன்குணர்ந்துள்ள இந்த அரசாங்கம், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், அதனை சீர்குலைக்கின்ற வகையில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் தேவையற்ற குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் சில விஷமத்தனமான செயற்பாடுகள் தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதை அறிய முடிகின்றது.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இருப்போரை இனங்கண்டு, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக நிறுத்தவும் இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகள் தலையெடுக்காமல் தடுக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X