Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காணாமற்போவதற்குக் காரணமாகிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினரையும், எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், நேற்றுத் திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.
கடந்த 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அச்செழு முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, காணாமற்போனார்கள்.
மட்டுவில் வடக்கைச் சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தராஜன் ஆகிய இளைஞர்கள் இவ்வாறு காணாமற்போனார்கள். இவர்கள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பிணையில் விடுவிக்கப்பட்ட 16 இராணுவத்தினர் தொடர்பான கோவை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு, அது இதுவரை காலமும் கிடப்பில் கிடந்துள்ளது.
இந்நிலையில், 18 வருடங்களின் பின்னர் இந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலனைக்கு எடுத்தது.
திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட போது, 5 இராணுவத்தினர் மாத்திரம் ஆஜராகியிருந்தனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், மிகுதி 11 பேருக்கும் எதிராக பிடியாணை பிறப்பித்தார்.
மொத்தம் 16 இராணுவத்தினரில் 2 இராணுவத்தினர் யுத்தத்தில் உயிரிழந்தமையால், மிகுதி 14 இராணுவத்தினரும், நேற்று மன்றில் ஆஜராகினர்.
52 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
7 hours ago