2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'இராணுவத்தினர் மக்களை பிழையாக வழி நடத்தினர்'

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கடந்த காலங்களில் இராணுவத்தினர் மக்களை பிழையாக வழி நடத்தியுள்ளனர். ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்றது. இதில் இணைத்தலைவராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

குருநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை பயன்படுத்துவதற்கு இராணுவத்தினரே பொதுமக்களை கடந்த காலங்களில் தூண்டியுள்ளனர். இவ்வாறான நிலைமைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாது.

மேலும், அரசியலை பேசுவதை நிறுத்தி, அபிவிருத்தி தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X