2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'இராணுவமே கைது செய்தது'

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'செல்வராஜா நந்தகுமார், பூதத்தம்பி ரதீஸ்குமார் ஆகிய இருவரையும் இராணுவமே கைது செய்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை தந்துள்ளனர். எனினும் அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என எஸ்.விஜிதா என்பவர் கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் சாட்சியமளித்தார்.

'நந்தகுமார், ரதீஸ்குமார் ஆகிய இருவரும் யாழ். வர்த்தக சங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, யாழ். மாம்பழம் சந்தியில் வைத்து அவர்களை இராணுவத்தினர் கைதுசெய்தனர். அதனை நேரில் கண்ட சாட்சிகளும் உள்ளன.

நாம் அப்பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கேட்ட போது அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வந்தது. பின்னர், அச்சுறுத்தல்கள் காரணமாக வழக்கை நாம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். விசாரணைகளை மேற்கொண்டு இருவரையும் இராணுவமே கைது செய்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவினர் அறிக்கை தந்துள்ளனர். எனினும், இருவர் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X