2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இராணுவம், கடற்படை போன்று அடாவடித்தனமாக காணி பிடிக்க முடியாது

Niroshini   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“இராணுவம், கடற்படையினர் போன்று அடாவடித்தனமாக காணிகளை நாங்கள் பிடிக்க முடியாது. சட்டத்தின் பிரகாரம் தான் காணிகளைப் பெறவேண்டும். பொலிஸாருக்கு காணிகள் வழங்குவதற்கு பொதுமக்களும் அமைப்புக்களும் முன்வரவேண்டும்” என யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற சிவில் சமூகக் கூட்டத்திலே சிரேஷ்ட பொலிஸார் இந்த விடயத்தை கூறினர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில்,

“1996 ஆம் ஆண்டு இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைபற்றிய பின்னர் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்கள் உருவாகின. தனியார், காணிகள் வீடுகளிலேயே பொலிஸ் நிலையங்கள் இன்று வரையில் இயங்குகின்றன.

இராணுவத்தினர் தனியார் பிடித்து வைத்துள்ள காணிகள். வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால் யாழ்ப்பாணம், கோப்பாய் உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் இன்னமும் வெளியேறவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X