2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'இரு மகன்களையும் தொலைத்து விட்டேன்'

Gavitha   / 2016 மார்ச் 02 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இராணுவச் சுற்றிவளைப்பின் போது ஒரு மகனையும், இந்தியாவுக்குச் சென்ற இன்னொரு மகனையும் இழந்து வருந்துகின்றேன்' என தச்சந்தோப்பைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற தாயார் கூறினார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் காணாமற் போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற போதே, மேற்படி தாயார் இவ்வாறு கூறினார்.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி தச்சந்தோப்புப் பகுதியில் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பில் தலையாட்டி மூலம் 200 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரணை செய்துவிட்டு, 24 பேரைத் தடுத்து வைத்திருந்ததுடன், மிகுதிப் பேரை விடுதலை செய்தனர். 24 பேரில் எனது மகனும் இருந்தார். அதன் பின்னர் மகன் பற்றிய எந்தத் தகவலும் இன்றுவரையில் இல்லை.

எனது 2 ஆவது மகன் திருக்குமரன் கடல்வழியாக இந்தியா செல்வதற்காக கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி சென்றார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இன்றுவரையில் தெரியாது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X