2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

1 இலட்சம் ரூபாய் பெறுமதியான உடமைகள் கொள்ளை

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

பலாலி வீதி, கந்தர்மடம் சந்தியில் 5ஆவது வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த 12 இலட்சத்து 94 ஆயிரத்து 270 ரூபாய் பெறுமதியான  உடமைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவமொன்று, புதன்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, கதவை உடைத்து உள்நுழைந்து திருடர்கள், நகைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காலையில் எழுந்த பின்னரே, கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில் வீட்டு உரிமையாளருக்கு தெரியவந்தது.

இது தொடர்பில், வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை யடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X