Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடல் எல்லைக்குள் 85 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக் கஞ்சா 57 கிலோகிராமுடன் நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை(28) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மீன் பிடிப்பதாக காட்டிக்கொண்டு பயணித்த படகில் இருந்தே இந்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபர் எனவும் இந்தக் கேரளக் கஞ்சா இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரையும் கேரளக் கஞ்சாவையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். விசாரணைகளையடுத்து, சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago