2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'ஈழத்துக்காக இசைக்கச்சேரி நடத்தினேன்'

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    எம்.றொசாந்த்

தமிழக முதலமைச்சராக எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) இருந்த வேளை ஈழத்தமிழ் மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு எங்களுக்குக் கூறினார். அதற்கிணங்க வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தோம் என இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நடைபெற்ற 'நண்பேண்டா' இசை நிகழ்ச்சியில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

'ஈழத்தமிழர்களுக்கான நிதி திரட்டியமைக்காக இந்திய சி.பி.ஐ யின் விசாரணைகளையும் எதிர்கொண்டோம்.
இங்கே வாழும் மக்கள், தாங்கள் துன்பப்பட்ட துயரப்பட்ட விடயங்களை மறக்க முயலவேண்டும். பழையதை நினைத்து வாழவேண்டும் என்று இருந்தாலும், அடுத்த சமுதாயத்துக்காக நாங்கள் போட்ட விதைகள் மேலே வந்து பயன்தரும், நிழல் தரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

நடந்து போனவைகளை மறப்பதற்காகவும், மேலே இருப்பவர்களுக்கு நன்றி செலுத்த, 1 நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வை ஆரம்பிப்போம்' என்றார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறுகையில்,

'எங்கள் நடுவில் இப்போது இல்லாமல் மேலிருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவர்களை வணங்குவோம். 50 வருட பாடல் வாழ்க்கையில் முதன்முதலாக யாழ்ப்பாணம் வந்தமை மகிழ்ச்சியாகவுள்ளது. புண்பட்ட இதயங்களுக்கு இசையால் மருந்து கொடுக்கவுள்ளேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X