2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்

George   / 2016 ஜனவரி 22 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தந்தை செல்வா சதுக்கத்துக்கு முன்பாக தனக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவரை தொடர்புகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை முன்வைத்தார். எனினும், அவர் தொடர்ந்தும் உண்ணாவிரதமிருந்து வருகின்றார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு கோரி கொடிகாமம் வரணிப் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துசாந் என்ற தனிநபர், தந்தை செல்வா சதுக்கத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (22) உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு முதல்வரை குறை கூறுவதற்கு செலவழிக்கும் நேரத்தை விடுத்து, மக்களுக்கு சேவை செய்வதற்கு அதனைச் செலவழிக்க வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

தனது செயலாளரை அவ்விடத்துக்கு அனுப்பிய முதலமைச்சர், செயலாளரின் அலைபேசியூடாக உண்ணாவிரதமிருந்தவருடன் தொடர்புகொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை முன்வைத்தார். எனினும், தான் கூறியபடி 6 மணி வரையில் உண்ணாவிரதத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், தன்னைப் பற்றி யோசிக்காமல் முதலமைச்சர் தன் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என அந்த இளைஞன் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X