Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 09 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பொது அலுவலரை தனது கடமைக்குச் செல்லாமல் தடுப்பது குற்றம் என்றாலும், வேலையற்ற பட்டதாரிகளின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களின் விடாமுயற்சிக்கும் அவர்களின் உண்மையான பிரச்சனைக்கும் மதிப்பளித்து அங்கிருந்து அகன்று விட்டேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
“வட மாகாண சபையின் பக்கமாக செல்லும் பாதையிலும் வாயிற் கதவடைத்து கூட்டம் நின்றது. நான் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தேன். ஏற்கெனவே அவர்களுடன் நான் பேசிய விடயங்கள் தான் அவை. வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வேண்டும் என்று கேட்டார்கள்.
“ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் பேசியபின் கூறுகின்றேன் என்று கூறிவிட்டு, உள்ளே செல்ல எத்தனிக்கையில் வாயிற் கதவுகளுக்கு அவர்களே சங்கிலி போட்டு பூட்டும் இட்டுத் திறப்பை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்று தெரிய வந்தது.
“வேலையற்றபட்டதாரிகள் சுமார் இரண்டு மாதகாலமாக வேலை கேட்டு போராடிவரும் விடாமுயற்சிக்கும் அவர்களின் உண்மையான பிரச்சினைக்கும் மதிப்பளித்து அங்கிருந்து அகன்று விட்டேன்.
“ஆனால், அவர்களின் போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி காரியாலயத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோதான் நடைபெற வேண்டும். வெறும் சிபாரிசு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது” என, சிவி அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago