2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு 10 மில்லியன் ரூபாய் கொடுங்கள்'

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்துக்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்' என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு (64 ஆவது அமர்வு) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X