2025 ஜூலை 16, புதன்கிழமை

'ஊடகவியலாளர்கள் என்னை ஏசினர்'

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்கள் தன்னை ஏசியதாக புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் 4ஆவது சந்தேகநபர் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர் இவ்வாறு முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

கடந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்துக்கு வெளியில் சென்ற போது, ஊடகவியலாளர்கள் தன்னைப் புகைப்படம் எடுத்ததாகவும் தான் எடுக்க வேண்டாம் எனக் கூறியதும் அவர்கள் தன்னை ஏசியதாகவும் நீதவானிடம் முறையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X