2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

‘ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் எவ்வாறு வெளிநாடு செல்லலாம்?’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

“நெல்சிப் திட்டத்தில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அதிகாரிகள், வெளிநாடு சென்றது எவ்வாறு?” என, வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர், நேற்று இடம்பெற்ற சபை அமர்வின் போது கேள்வி எழுப்பினர். 

வடமாகாண சபையின் 70ஆவது அமர்வு, நேற்று (20) நடைபெற்றது. இதன்போது, 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில், மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு கேள்விகள் எழுப்பப்பட்டன.  

“நெல்சிப் திட்டத்தில் இடம் பெற்றஊழல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன. நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலும், இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதிகாரிகளில் ஒருவர், முன்னதாகவே வெளிநாடு சென்றுவிட்டார். மற்றொரு அதிகாரி பின்னர் சென்றுள்ளார். 

இவர்களுக்கு பிரதம செயலாளர் எவ்வாறு அனுமதி வழங்கினார்? அரச அதிகாரிகள் வெளிநாடு செல்ல, கடுமையான ஒழுங்கு நடைமுறைகள் உள்ள நிலையில், எவ்வாறு இவர்கள் வெளிநாடு சென்றார்கள்?” என, அவர்கள் கேள்வி எழுப்பினர்.  

இதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், “வெளிநாடு சென்ற அதிகாரிகள், உரிய வகையில் பிரதம செயலாளரிடம் அனுமதி பெறவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரச அதிகாரிகள் தொடர்பாக, அவர்கள் சென்ற நாடுகளின் தூதரகங்களுக்கு பிரதம செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X