2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'எந்த ஒரு ஆயுதக்கும்பலுக்கும் நான் அடிபணியேன்'- விஜயகலா

Sudharshini   / 2016 ஜனவரி 30 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கடந்த காலத்தில் ஆயுதக்குழுக்களுடன் இணைந்து செயற்பட்ட சில பிரதேச செயலர்கள், ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்துக்கு அராஜகமான முறையாக அழைப்பு விடுக்கின்றனர். நான் எந்த ஒரு ஆயுதக்கும்பல்களுக்கும் அடிபணிய மாட்டேன். இந்த இடத்திலேயே உயிரை விட தயாராகதான் வந்துள்ளேன் என்று விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று சனிக்கிழமை (30) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் இணைத்தலைமை உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,'சில பிரதேச செயலர்கள் தமது பிரதேச ஒருங்கிணைப்பு குழுகூட்டத்திற்கு அராஜகமான முறையில் அழைப்பு விடுக்கின்றனர்

அதாவது, நீங்கள் விரும்பினால் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று கடிதம் அனுப்புகின்றனர். இதனை தவிருங்கள். அன்பாக அணுகுங்கள். நாம் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தெரிவு செய்யபட்டுள்ளோம். நாம் உங்கள் முன் நின்று செயற்பட வரவில்லை. உங்கள் பின் நின்று செயற்படத்தான் விரும்புகிறோம்.

ஆகவே, அதனை உணர்ந்து செயற்படுங்கள். பிரதேசம் சார்ந்த செயற்பாடுகளை மாவட்ட செயலருக்கு தெரியப்படுத்துங்கள். பிரதேச செயலர்களின் இவ்வாறான செயற்பாடுகளை மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டால் அதுபற்றி எனக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றே கூறுகிறார். எனவே, அதிகாரிகள் மக்கள் நலன் சார்ந்து செயற்படுங்கள்'என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X